இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உயர் பதவியில் இருந்து சாதனை நிகழ்த்தி வருபவர்கள் பலர், தமிழ் வழியில் மாநில பாடதிட்டத்தில் படித்தவர்கள்தான் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.வஉசி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அப்போது அவரிடம், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரமும், மாணவர்களின் கற்கும் திறனும் குறைந்து விட்டதாக ஆளுநர் கூறியது குறித்து கேட்டபோது, தமிழ்நாடு பாடத்திட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாக தெரியவில்லை என்றார்.