டிக்டாக் செயலி அமெரிக்காவில் தனது சேவையை நிறுத்தி விட்டதை தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், அந்நாட்டில் தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து அதை நீக்கி உள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என டிக்டாக் மீது தொடரப்பட்ட சட்ட நடவடிக்கைகளில் தீர்வு காணப்படாத நிலையில், அமெரிக்காவில் தனது சேவையை டிக்டாக் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த ஏப்ரலில், டிக்டாக்கின் சீனாவை சேர்ந்த தாய் நிறுவனமான ByteDance Ltd அமெரிக்காவில் தனது வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். ஆனால் அதை ஏற்க ByteDance Ltd மறுத்துவிட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் சேவையை நிறுத்தும் நிலைக்கு அதன் அமெரிக்க விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.