கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில் உள்ள சூழல் சுற்றுலா மையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை முதல் நான்கு நாள் மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் இருக்கக்கூடிய மன்னவனூர் பகுதியில் அமைந்துள்ள சூழல் சுற்றுலா மையம் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது . இங்கு பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு அடிப்படை வசதிகள் செய்த பிறகு ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் வழக்கம் போல சுற்றுலா பயணிகள் சென்று வரலாம் என கொடைக்கானல் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.