பீகார்... சாலையில் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த இளைஞர். செல்போனுக்கு வந்த லாஸ்ட் கால் லிஸ்ட்டை எடுத்து விசாரித்த போலீஸ். கொலையாளிகளை கையும் களவுமாக பிடித்து விசாரணை. கொலையை விபத்து போல் சித்தரிக்க முயற்சி. சாலையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த இளைஞர் யார்? கொலை செய்யப்பட்டவருக்கும் கொலையாளிகளுக்கும் என்ன தொடர்பு? நடந்தது என்ன?ஃபுல்வாரி - ராஜ்வான் சாலையில சுல்பிகர்-ங்குற இளைஞர் ஆக்சிடன்ட் ஆகி, காயங்களோட உயிரிழந்து கிடக்குறதா போலீஸ்க்கு தகவல் கிடைச்சுருக்கு. இதனால சம்பவ இடத்துக்கு போன போலீஸ் முதல்ல இளைஞர் உயிரிழந்து கிடந்த இடத்த ஆய்வு பண்ணாங்க. அப்ப இளைஞரோட உடல் ஃபுல்லா ஒரே காயங்களா இருந்துருக்கு. ஆனா பக்கத்துல கிடந்த அவரோட பைக்குல ஒரு சேதமும் ஏற்படல.இதனால சந்தேகம் அடைஞ்ச போலீசார், இத சந்தேக கேஸா ஃபைல் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. முதல்ல அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க.ஆனா கொலையாளிகள் பத்தி எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அதுக்கடுத்து சுல்பிகரோட செல்போன கைப்பற்றுன போலீஸ், அவருக்கு வந்த லாஸ்ட் கால் லிஸ்ட்ட எடுத்து பாத்துருக்காங்க. அதுல குஷ்பு-ங்குற பொண்ணோட பேரு காட்டிருக்கு. அத வச்சு குஷ்புல கஸ்டடியில எடுத்த போலீஸ் அவங்க கிட்ட விசாரிக்க ஆரம்பிச்சாங்க.பீகார்ல உள்ள கிஷன்கஞ்ச பகுதிய சேந்த சுல்பிகர் கடந்த வருஷம் ஒரு நிகழ்ச்சிக்கு போய்ருக்காரு. அப்ப இவருக்கும் குஷ்பு-ங்குற இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. ஆரம்பத்துல நார்மலா பேச ஆரம்பிச்ச ரெண்டு பேரும் அதுக்கப்புறம் ஃபோன் நம்பர பரிமாறிக்கிட்டு எந்நேரமும் ஃபோன்லயே மூழ்கி போய் கிடந்துருக்காங்க. இந்த பழக்கமே இவங்களுக்குள்ள அந்தரங்கமாக இருக்குற அளவிற்கு நெருக்கமான உறவா மாறிருக்கு. சுல்பிகர் காதலி குஷ்புவ சந்திக்க சில வாரங்களுக்கு ஒருமுறை அவரோட சொந்த கிராமத்துக்கு போய்ருவாராம். சம்பவத்தன்னைக்கு, சுல்பிகருக்கு ஃபோன் பண்ண குஷ்பு அவர தன்னோட வீட்டுக்கு கூப்டு தனிமையில இருந்துருக்காங்க. அப்ப எதார்த்தமா குஷ்புவோட அண்ணன்களான முகமது ஆதாம், சஹாஜாத் ஆலம், முகமது அஞ்சர் ஆலம்ன்னு மூணு பேரும் வீட்டுக்குள்ள வந்துருக்காங்க. ரெண்டு பேரும் தனிமையில இருக்குறத பாத்து கொதிப்படைஞ்ச அந்த மூணு பேரும் சுல்பிகர போட்டு சரமாரியா அடிச்சுருக்காங்க. அடுத்து குஷ்பு, இவரு என்ன உண்மையா லவ் பண்றாரு, நான் இவரதான் கல்யாணம் பண்ணுவேன், அதனால சுல்பிகர எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிருக்காங்க. அதுக்கு குஷ்புவோட அண்ணன்கள், தங்கச்சியோட வாழ்க்கை தான் முக்கியம்ன்னு நினைச்சு சுல்பிகர் கிட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை நடத்திருக்காங்க. அப்ப தான் சுல்பிகர் எனக்கு கல்யாணம் ஆகிருச்சி, இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்குன்னும் சொல்லி என்ன தயவு செஞ்சு விட்ருங்க, நான் இனிமே குஷ்பு கூட பேச மாட்டேன்னு அவங்க கால்ல விழுந்து கெஞ்சிருக்காரு. இதகேட்டு கொலை வெறியான குஷ்புவும் அவரோட அண்ணன்கள் மூணு பேரும் கீழ கிடந்த கல்லு, கட்டைன்னு எல்லாத்தையும் எடுத்து அவர சரமாரியா தாக்கிருக்காங்க.இதுல நிலைக்குலைஞ்ச சுல்பிகர், சம்பவ இடத்துலையே சுருண்டு விழுந்து துடிக்க துடிக்க உயிரிழந்துட்டாரு. அடுத்து இந்த கொலை வழக்குல மாட்டிப்போம்ன்னு நினைச்ச முகமது ஆதாம், சஹாஜாத் ஆலம், முகமது அஞ்சர் ஆலமும் இத ஆக்சிடன்ட் மாதிரி மாத்த பக்காவா ப்ளான் போட்ருக்காங்க.அதுபடி சடலத்த அங்கருந்து ஒரு 2 கிலோ மீட்டர் கார்ல வச்சு எடுத்துட்டு போன அந்த மூணு பேரும், சடலத்த அங்குள்ள ஒரு ரோட்ல தூக்கி வீசிட்டு, 5 முறை கார வச்சு ஏத்திருக்காங்க. அதே மாதிரி சுல்பிகரோட பைக்க அவரு பக்கத்துல போட்டுட்டு அந்த கொலை கும்பல் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க.ஆனா பைக்குக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படாததை வச்சு இத கொலைன்னு கன்பார்ம் பண்ண போலீஸ், சுல்பிகரோட போன் கால்ஸ ஆய்வு செஞ்சு குஷ்பு, முகமது ஆதாம், சஹாஜாத் ஆலம், முகமது அஞ்சர் ஆலத்த விசாரிக்குற முறையில விசாரிச்சு, அவங்க வாக்குமூலத்தோட அடிப்படையில நாலு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.