தெலங்கானா... வயலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த விவசாயி. வேகமாக வந்த டிராக்டர் மோதி, விவசாயி சம்பவ இடத்திலேயே பலி. விவசாயியின் மனைவி மீது சந்தேகமடைந்து, கஸ்டடியில் எடுத்த போலீஸ். விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல். நடந்தது விபத்து அல்ல, கொலை என விசாரணையில் அம்பலம். கணவனை, மனைவியே ஆள் வைத்து கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?மதிய நேரம்... வயலுக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பிட்டு இருந்தாரு ரத்னய்யா. அப்ப பின்புறத்துல வேகமாக வந்த டிராக்டர் ஒன்னு, அவரு மேல மோதிருக்கு. இதுல தூக்கி வீசப்பட்ட ரத்னய்யா, தலையில பலத்த காயமடைஞ்சு சம்பவ இடத்துலையே துடிதுடிக்க உயிரிழந்துட்டாரு. ஆக்சிடண்ட்டுக்கு அப்புறம் அந்த டிராக்டர் ஓட்டுநரும் அங்கருந்து தப்பிச்சு போய்ருக்காரு.இதுக்கிடையில அந்த வழியா நடந்து போன பொதுமக்கள், சடலத்த பாத்து போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொன்னாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க.அதுக்கப்புறம் இத ஆக்சிடன்ட் கேஸ்ஸா ஃபைல் பண்ணி விசாரிக்க ஆரம்பிச்சாங்க. விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் எங்க தப்பிச்சு போனாருன்னு கண்டுபிடிக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து ஆய்வு பண்ணிருக்காங்க. அதே மாதிரி ரத்னய்யாவோட மனைவி, சொந்தக்காரங்கன்னு எல்லார் கிட்டயும் இந்த சம்பவத்த சொன்ன, போலீஸ் அவங்கள நேர்ல வரவச்சுருக்காங்க.அடுத்த ரத்னய்யாவோட இறுதி சடங்க நடத்தி முடிச்ச மனைவி கவிதா, மறுநாள்ல இருந்து எந்த ஒரு சோகமும் இல்லாம, யார் கூடவோ அடிக்கடி ஃபோன் பேசிட்டும் இருந்துருக்காங்க. இத நோட் பண்ணிட்டே இருந்த ரத்னய்யாவோட தம்பி, கவிதா மேல சந்தேகமடைஞ்சுருக்காரு.அண்ணன் உயிரிழப்பு, உண்மையிலேயே ஆக்சிடண்டா இல்ல கொலையான்னு எனக்கு டவுட்டா இருக்கு, எங்க அண்ணி, எந்த ஒரு சோகமும் இல்லாம ஜாலியா இருக்காங்க, அதனால கவிதா மேல தான் எனக்கு சந்தேகம் இருக்குதுன்னு சொல்லிருக்காரு. இதனால கவிதாவ கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க போலீஸ். அப்ப போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு அவங்க முன்னுக்கு பின் முரணா பதில் அளிச்சதா கூறப்படுது. இதனால, அவங்க தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ் கவிதா கிட்ட தங்களோட பாணியில விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அதுல தான் பல உண்மைகள் வெளிய வந்துருக்கு.தெலங்கானாவுல உள்ள சௌடாபூர் கிராமத்த சேந்த ரத்னய்யா - கவிதா தம்பதிக்கு சில வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. இந்த தம்பதிக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஆரம்பத்துல இவங்களோட திருமண வாழ்க்க நல்லப்படியா தான் போய்ட்டு இருந்துருக்கு.ஆனா அதுக்கப்புறம் கணவன் - மனைவிக்கு இடையில அடிக்கடி சண்டை, கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கு. இதனால குடும்பத்துக்குள்ள நிம்மதியே இல்ல. இதுக்கிடையில கவிதாவுக்கு அதே ஏரியாவ சேந்த ராமகிருஷ்ணாவோட பழக்கம் ஏற்பட்டிருக்கு. ரெண்டு பேரும் நம்பர மாத்திக்கிட்டு எந்நேரமும் ஃபோன் பேசி தங்களோட காதல வளர்த்துருக்காங்க. ஆனா, இவங்களோட கள்ளக்காதல் விவகாரம் அடுத்த கொஞ்சம் நாட்கள்லையே ரத்னய்யாவுக்கு தெரியவந்துருக்கு.இதனால, மனைவிய கண்டிச்ச கணவன், தாலி கட்டுனவன் நான் இருக்கேன், நமக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க, ஆனா நீ நம்ம குடும்பத்த பத்தி யோசிக்காம, நீ ராமகிருஷ்ணா கூட தகாத உறவு வச்சுட்டு இருக்க, இத்தோட ராமகிருஷ்ணா கூட பழகுறத நிறுத்திரு அப்படி இல்லனா இந்த விஷயத்த குழந்தைங்க கிட்டயும், நம்ம சொந்தக்காரங்க கிட்டயும் சொல்லி உன்ன அசிங்கப்படுத்திருவேன்னு சொல்லிருக்காரு. இதனால கடும் ஆத்திரமடைந்து, ராமகிருஷ்ணாவுக்கு ஃபோன் பண்ண கவிதா, நம்ம காதல் விவகாரம் என்னோட கணவனுக்கு தெரிஞ்சுருச்சு, இதுக்கப்புறம் அவன், நம்ம ரெண்டு பேரையும் பேச விடமாட்டான், அவன் உயிரோட இருக்குற வர்ற நம்ம பேசக் கூட முடியாது, அதனால அவன் கதைய முடிச்சுட்டா, நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம்ன்னு சொல்லிருக்காங்க.இதற்கடுத்து, ரெண்டு பேரும் சேந்து ரத்னய்யாவ கொலை செய்ய திட்டம் போட்ருக்காங்க. சம்பவத்தன்னைக்கு ரத்னய்யா தன்னோட வயலுக்கு போய்ட்டு வீட்டுக்கு திரும்பிட்டு இருந்தாரு.அப்ப பின்புறத்துல டிராக்டர வேகமாக ஓட்டி வந்த ராமகிருஷ்ணன், ரத்னய்யா மேல மோதிருக்காரு. இதுல தூக்கி வீசப்பட்ட ரத்னய்யா தலையில பலத்த காயமடைஞ்சு சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு.விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் கவிதாவையும், ராமகிருஷ்ணாவையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க...