காசாவில் கருத்தடை உறைகளை இலவசமாக வழங்க அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஒதுக்கிய 430 கோடி ரூபாய் நிதியை புதிய அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். பல மாதங்களாக காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவத்திற்கும் இடையே போர் நீடித்த நிலையில் அங்கு கருத்தடை ஆணுறைகளை இலவசமாக வழங்கும் வினோத முடிவை முன்னாள் அதிபர் பைடன் எடுத்து அதற்காக நிதி ஒதுக்கியதை இப்போது டிரம்ப் நிர்வாகம் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசு செலவினங்களை குறைக்க பிரபல கோடீசுவரர் எலான் மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள செலவின குறைப்பு துறை இதை கண்டுபிடித்ததாக கூறப்பட்டாலும், இது டிரம்பின் ஒரு விளம்பர ஸ்டன்ட் எனவும் ஆணுறை வாங்க தாங்கள் நிதி எதுவும் ஒதுக்கவில்லை எனவும் பைடனின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.