சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக வேறு செலாவணியை பயன்படுத்தலாம் என்பது இந்தியாவின் திட்டமல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டாலருக்கு பதிலாக வேறு செலாவணியை பயன்படுத்த பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் முனைந்தால், அந்த நாடுகளின் இறக்குமதிக்கு நூறு சதவிகித வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் அப்படி ஒரு எண்ணமோ, கொள்கையோ இந்தியாவுக்கு கிடையாது என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெளிவு படுத்தி உள்ளார். இந்தியா,சீனா, ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் உலக மக்கள் தொகையில் 40 சதவிகிதத்தை கொண்டுள்ளன. மூன்றில் ஒரு பங்கு உலக GDP இந்த நாடுகளிடம் உள்ளது. எனவே,டாலரின் ஆதிக்கத்தை தடுக்க பிரிக்ஸ் நாடுகளின் கரன்சியில் ஒன்றை பொதுநாணயமாக பயன்படுத்தலாமா என ஆலோசிக்கப்பட்டாலும், அதில் எந்த தொடர் நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை, இந்த நிலையில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.