அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களுள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை, கியூபாவின் குவாண்டனாமோ விரிகுடாவில் உள்ள தடுப்பு மையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். புதிய அதிபராக பொறுப்பேற்ற பின் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் ட்ரம்ப், அதன் ஒரு பகுதியாக கூட்டாட்சி அதிகாரிகளுக்கு சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதற்கான அதிகாரத்தை விரிவுபடுத்தும் Laken Riley சட்டத்தில் கையெழுத்திட்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர், சட்டவிரோத குடியேறிகளை வேற்றுகிரகவாசி எனக் குறிப்பிட்டு, கொடும்குற்றம் புரிந்த ஏலியன்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்றார்.