டங்ஸ்டன் சுரங்க ஏலத்திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.