முதன்முறை, நீருக்கடியில் இயங்கும் ட்ரோனை ஏவி ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலை அழித்த வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது. உக்ரைனிய தாக்குதல்களிலிருந்து தப்புவதற்காக ரஷ்யா தனது கடற்படைக் கப்பல்களை நோவோரோசிஸ்க் (Novorossiysk) துறைமுகத்திற்கு மாற்றியிருந்த நிலையில், உக்ரைன் ஆளில்லா விமானங்கள் மூலம் அந்த துறைமுகத்தில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. சமீபத்தில், உக்ரைனிய மின் கட்டமைப்புக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய ரஷ்யாவின் ஏவுகணைகளை சுமந்து சென்றதில் இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு பெரும் பங்கு உண்டு.