கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2024-25 -ம் நிதியாண்டில் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு மூன்றரை லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் மூவாயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.