அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இஸ்ரேல் மற்றும் எகிப்து நாடுகளை தவிர்த்து உக்ரைன் உட்பட பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவிடம் இருந்து வளர்ச்சி உதவி முதல் இராணுவ உதவி வரை பெறும் நாடுகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.