இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, இன்ஸ்டாவில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது. கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் ஒரே நேரத்தில் பதிவிட முடியும் போட்டோக்களின் எண்ணிக்கை 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டது.