தெலங்கானா... பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட அழுகை சத்தம். நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக கதறி அழுத மனைவி. அண்ணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கொந்தளித்த தம்பி. போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டால் வெளிவந்த பகீர் உண்மை. காதல் மனைவியே கணவனுக்கு எமனாக மாறியது ஏன்? நடந்தது என்ன?தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத்ல உள்ள போர்காம் கிராமத்த சேர்ந்த ரமேஷும், செளம்யாவும் கடந்த 15 வருஷத்துக்கு முன்னாடி காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இந்த தம்பதிக்கு ரெண்டு மகன், ஒரு மகள்னு மூணு குழந்தைங்க இருக்காங்க. இதுக்கு மத்தியில, பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா வேலை பாத்துட்டு இருந்த செளம்யாவுக்கும், அதே ஸ்கூல்ல PT ஆசிரியரா இருக்குற திலீப் கூட பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவா மாறிருக்கு. இந்த விஷயம், தெரிஞ்சு கொதிச்சுப் போன கணவர் ரமேஷ், மனைவிய கண்டிச்சிருக்காரு. அதே மாதிரி, திலீப்பையும் கண்டிச்சிருக்காரு. கணவருக்கு விஷயம் தெரிஞ்சிருச்சுன்னு நினச்சு பயத்துல இருந்த செளமியா, கொஞ்ச நாள் திலீப் கூட பழகாம இருந்துருக்காங்க. ஆனா, ரெண்டு மாசத்துக்கு அப்புறம் திரும்பவும் தகாத உறவ தொடர்ந்திருக்காங்க.தனியார் தொழிற்சாலையில வேலை பாத்துட்டு இருந்த ரமேஷ், நைட் 9 மணிக்கு, நைட் ஷிப்டுக்கு போறதுக்காக வீட்டுல இருந்து கிளம்பிருக்காரு. கணவர் வீட்டு வாசல தாண்டுனதுமே, செல்போன கையில எடுத்த மனைவி, காதலன் திலீப்புக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லிருக்காங்க. மனைவி மேல ஏற்கெனவே சந்தேகப்பட்ட ரமேஷ், வேலைக்கு போகாம, வீட்டு பக்கத்துலேயே ஒரு இடத்துல மறஞ்சு நின்னுட்டு இருந்துருக்காரு. அவரு சந்தேகப்பட்ட மாதிரியே திலீப், அவரோட வீட்டுக்கு போய்ருக்காரு. இத பாத்து, ஆத்திரத்தோட உச்சிக்கே போன ரமேஷ், பாஞ்சு போய் திலீப்ப சரமாரியா அடிச்சு விரட்டிவிட்டுருக்காரு. அதோட, மனைவி செளம்யாவையும் சரமாரியா தாக்கி செல்போனையும் பிடுங்கி வச்சுருக்காரு.ரமேஷ் உயிரோட இருக்குற வரைக்கும் திலீப்கூட நிம்மதியா இருக்க முடியாதுன்னு நினைச்ச செளம்யா, தன்னோட காதலன்கூட சேர்ந்து கணவனோட கதையவே முடிக்க திட்டம் போட்டுருக்காங்க. இந்த கொலைய கணகச்சிதமா முடிக்கிறதுக்கு கூலிப்படை கும்பல் கிட்ட டீல் பேசுன செளம்யா, அந்த கும்பலுக்கு அட்வான்ஸ் பணமா 35 ஆயிரம் கொடுத்திருக்காங்க. சம்பவத்தனைக்கு, கணவர் ரமேஷுக்கு பால்ல தூக்க மாத்திரை கலந்து கொடுத்துருக்காங்க. அத குடிச்ச கொஞ்ச நேரத்துலேயே அவரு ஆழ்ந்து தூங்கிருக்காரு. அதுக்குப்பிறகு, அந்த கூலிப்படை கும்பலுக்கு செளம்யா ஃபோன் பண்ணிருக்காங்க. ஆனா, அந்த கும்பல் அவங்ககிட்ட பணத்த மட்டும் வாங்கிட்டு ஃபோன் எடுக்காம இருந்துருக்குது. அதனால, காதலன் திலீபுக்கு ஃபோன் பண்ணி வீட்டு வரச்சொல்லிருக்காங்க. உடனே திலீப் தன்னோட தம்பிய கூப்பிட்டுக்கு அங்க போயிருக்கான். அதுக்குப்பிறகு, மூணு பேரும் சேந்து தூங்கிட்டு இருந்த ரமேஷ், கழுத்த துணியால சுற்றி துடிக்க துடிக்க கொன்னுருக்காங்க. திலீப்பும் அவனோட தம்பியும் அங்க இருந்து கிளம்பி போனதும், மனைவி செளம்யா அழுது நாடகமாடுனதுதான் கொடூரத்தோட உச்சமே. மதுபோதையில இருந்த கணவர் திடீர்னு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துட்டதா, உறவினர்கள் சிலருக்கு ஃபோன் பண்ணி சொல்லிருக்காங்க. அதுமட்டுமில்ல, சடலத்த வைக்கிற ஃப்ரீசர் பாக்ஸ், மேளம் அடிக்கிறவங்கள வரவச்சு, இறுதிச்சடங்குக்கான எல்லா ஏற்பாடுகளையும் செளம்யா வேக வேகமா பண்ணிருக்காங்க. விஷயம் யாருக்கும் தெரியுறதுக்குள்ள, காதும் காதும் வச்ச மாதிரி ரமேஷ் சடலத்த அடக்கமும் பண்ணிட்டாங்க. ஆனா, அக்கம்பக்கத்துல இருந்த சிலருக்கு, ரமேஷ் மரணத்துல சந்தேகம் வரவே அவரோட தம்பிக்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிருக்காங்க. அடுத்து, ரமேஷோட தம்பி காவல்துறையினருக்கு தகவல் சொன்னதும் அவங்க, செளமியாக்கிட்ட விசாரணை நடத்துனாங்க. அதுலதான், மொத்த உண்மையும் வெளில வந்திருக்கு. விசாரணைக்கு அப்புறம், செளமியாவையும், ஆண் நண்பரான திலீப் அவனோட தம்பின்னு மூணு பேரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடச்சிட்டாங்க.