ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை தீவிரப்படுத்தியதால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் கிடைத்த ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு மாற்றாக, வளைகுடா நாடுகளில் இருந்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.