அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்றதற்காக டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது உக்ரைன் மற்றும் காசா போர் போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.