ஹோலி பண்டிகையை விரும்பாதவர்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைச்சர் நிஷாத், ஹோலியும் ரம்ஜானும் ஒற்றுமையின் பண்டிகைகள் என்றாலும், எதிர்க்கட்சியினர் உள்ளே புகுந்து அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.