இந்தியர்கள் பயணம் செய்ய ரஷியா அடுத்தாண்டு முதல் விசா இல்லாமல் அனுமதிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சீனா மற்றும் ஈரான் நாட்டினரை விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைய ரஷியா அனுமதித்து வருகின்றது. இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளதை தொடர்ந்து, இந்தியாவுக்கும் விரிவுப்படுத்த ரஷியா முன்வந்துள்ளதாக கூறப்பட்டுகிறது.