கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஜெர்மனியில் ஒருவர் தனது வீட்டை 45 ஆயிரம் விளக்குகளால் அலங்கரித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.ஸ்வாபியன் கிராமத்தில் வசிக்கும் ஜோசப் குளோகரின் என்பவர் கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது வீட்டை இது போல் அலங்கரித்து வருகிறார். மான், தேவதை, நட்சத்திரங்கள் என 30க்கும் மேற்பட்ட உருவங்களை வெறும் 6 வாரங்களில் தயார் செய்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளார். கடந்தாண்டு ஜோசப்பின் மனைவி புற்றுநோயால் உயிரிழந்த நிலையில், தனது வீட்டை பார்வையிட்ட பின் மக்கள் கொடுக்கும் பரிசுத் தொகை அனைத்தையும் குழந்தைகள் நல்வாழ்வு மையத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்.