கோகோ உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அணியில் பங்கேற்று சென்னை திரும்பிய தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவையை சேர்ந்த சுப்ரமணி, போட்டிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்த போது மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு அரசு காவல்துறை வேலைவாய்ப்பு வழங்கிட அவர் கோரிக்கை விடுத்தார்.