எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனது வாக்குச்சாவடியில் பரப்புரை மேற்கொண்ட புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தங்களது கருப்பு சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என எச்சரித்துள்ளார்.