தமிழக வெற்றிக் கழகத்துக்கு, விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் போட்டியிட பொது சின்னம் ஒதுக்கக் கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்தாண்டே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற 10 விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு, அதில் ஒன்றை ஒதுக்குமாறு மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.பொது சின்னம் கிடைத்ததுஇந்நிலையில், தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்துக்கு பொதுச் சின்னமாக விசிலை தேர்தல் ஆணையம், இன்று 22ஆம் தேதி ஒதுக்கியுள்ளது. தவெக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான, தவெகவினர் பொதுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தவெகவினர் கொண்டாடி வருகின்றனர் இதையும் பாருங்கள் - பிரஸ்மீட்டில் சட்டென ஆதாரத்தை காட்டி இபிஎஸ் அதிரடி