உத்தரபிரதேசம்... கணவன் கழுத்தறுத்து தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய மனைவி. முகத்தில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர். சடலத்தை போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வைத்த போலீஸ். கணவன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட். மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள். கணவனை கொலை செய்யும் அளவுக்கு மனைவிக்கு அப்படி என்ன ஆத்திரம்? பின்னணி என்ன?டிசம்பர் 27ஆம் தேதி, நைட்டு நேரம். பக்கத்து வீட்டுக்கு ஓடிப்போன பெண் ஒருத்தங்க, என் கணவன் கலீம் கழுத்தறுத்து தற்கொலை பண்ணிக்கிட்டதா சொல்லி அழுதுருக்காங்க. இதகேட்டு அதிர்ச்சியடைஞ்ச பக்கத்து வீட்டுக்காரங்க, உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சு விசாரணை பண்ணிருக்காங்க. அடுத்து வீட்டுக்கு வந்த கலீமோட பெற்றோரும், சகோதரியும் சடலத்த கட்டிப் பிடிச்சு அழுதுருக்காங்க. அப்ப கலீமோட முகத்துல காயங்களா இருந்துருக்கு. இத நோட் பண்ண தந்தை, கழுத்தறுத்து தற்கொலை பண்ணிக்கிட்டானு சொல்றிங்க, ஆனா முகத்துல ஏன் காயமா இருக்குன்னு மருமகள் கிட்ட கேட்ருக்காரு. இதுக்கு அந்த பெண் முன்னுக்கு பின் முரணா பதில் அளிச்சுருக்காங்க. இதனால மருமகள் மேல சந்தேகமடைஞ்ச, கலீமோட பெற்றோர் அவங்க மேல புகார் அளிச்சுருக்காங்க.இதுக்கிடையில வெளியான போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கலீம்ம யாரோ அடிச்சு கொலை பண்ணிருக்காங்கன்னு குறிப்பிட்டு இருந்துச்சு. கலீமோட பெற்றோர் கொடுத்த புகார வச்சும், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ட வச்சும் அவரோட மனைவி தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ், அந்த பெண்ண கஸ்டடியில எடுத்து விசாரிச்சுருக்காங்க. உத்தரபிரதேசத்துல உள்ள தேஹாத் பகுதிய சேந்த கலீம்க்கு அதே பகுதிய சேந்த ஒரு பெண் கூட 13 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணமாகிருக்கு. மதுபோதைக்கு அடிமையான கலீம், எந்நேரமும் வீட்டுக்கு குடிச்சுட்டு வர்றது, மனைவிய போட்டு அடிக்கிறதுன்னு சித்ரவதை பண்ணிருக்காரு. கல்யாணமான புதுசுல இருந்தே கணவன் - மனைவிக்கு இடையில புரிதலே இல்லாம இருந்துருக்கு. அதே மாதிரி கலீம்-க்கு ஏகப்பட்ட கடன் இருந்ததாகவும் கூறப்படுது.இதுக்கிடையில கலீமோட மனைவிக்கும் அவரோட உறவினரான சந்த்பாபுவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. கலீம் வேலைக்கு போனதுக்கு அப்புறம், சந்த்பாபுவ அடிக்கடி வீட்டுக்கு கூப்டுற மனைவி அவரு கூட தனிமையிலையும் இருந்துருக்காங்க. இந்த விஷயத்த தெரிஞ்சு அதிர்ச்சியான கலீம், நான் ஒருத்தன் இருக்கும்போது, உனக்கு இன்னொருத்தன் கேட்குதான்னு கேட்டு அடிச்சுருக்காரு. அதுக்கு மனைவி, நீ கல்யாணமான நாள்ல இருந்து, என் கிட்ட பாசமாவே பேசுனது கிடையாது, என்னைய அடிச்சு சித்ரவதை தான் பண்ணிருக்க, அதனால தான் நான் சந்த்பாபு கூட பழக ஆரம்பிச்சேன்னு சொல்லிருக்காங்க. இதனால கணவன் மனைவிக்கு இடையில கடும் பிரச்னை ஏற்பட்டிருக்கு.கலீம் உயிரோட இருக்குற வற நம்ம சந்த்பாபு கூட நிம்மதியா இருக்க முடியாதுன்னு நினைச்ச மனைவி, கணவன கொலை பண்ண திட்டம் போட்ருக்காங்க. சம்பவத்தன்னைக்கு கலீம் வீட்ல தூங்கிட்டு இருந்தாரு. அப்ப தன்னோட காதலன ஃபோன் பண்ணி வரவச்ச மனைவி, வீட்ல இருந்த கத்திய வச்சு கணவன கழுத்தறுத்து கொன்னுட்டாங்க. அதுக்கப்புறம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட கலீம் சூசைட் பண்ணி கிட்டதா நாடமாடிருக்காங்க. விசாரணை மூலம் எல்லா உண்மையையும் தெரிஞ்சக்கிட்ட போலீஸ் சந்த்பாபுவையும் கலீமோட மனைவியவும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க.