உத்தரகாண்ட்டில் திருமணம் செய்து பின்னர் கொடுமை படுத்துவதாக வழக்குப் பதிந்து கோடிக்கணக்கில் பணம் பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிக்கி என்ற சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து, பின்னர் கணவரின் குடும்பத்தினர் கொடுமை படுத்துவதாக கூறி வழக்கு பதிந்து அவரிடமிருந்து 75 லட்சம் ரூபாய் செட்டில்மென்டாக பெற்றுள்ளார். இதனை தொடர்ந்த 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை மணந்து அவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை செட்டில்மென்டாக பெற்றவர் கடந்த ஆண்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து 36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டில் இருந்து மாயாமானர். மனைவி இறந்த மற்றும் விவாகரத்து ஆன பணக்கார ஆண்களே சீமாவின் குறி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.