9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் சீன அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், 1 க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனையடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டதில், இந்திய அணி 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.