சாதாரண கட்சித் தொண்டராக, தமது அரசியல் வாழ்வைத் தொடங்கி, 50 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து திமுகவின் தலைமைப் பதவிக்கு உயர்ந்தவர். அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து தமது திறமையை நிரூபித்து வருபவர். முதலமைச்சர் பதவியில் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் மு.க.ஸ்டாலின். கடின உழைப்பு மற்றும் பொறுமைக்கு சொந்தக்காரரான மு.க.ஸ்டாலினின் 73ஆவது பிறந்தநாளில் அவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.கோபாலபுரம் இளைஞர் திமுக பல லட்சம் திமுக தொண்டர்கள் 'தளபதி' என்றழைக்கும் மந்திரச் சொல்லுக்கு சொந்தக்காரர் மு.க.ஸ்டாலின். அவரது அரசியல் பயணம் 1967ல் தொடங்கியது. கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை மு.க.ஸ்டாலின் ஆரம்பித்தபோது அவருக்கு வயது 14. பெரியார், அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டம், திமுக மாநாடுகளுக்கு நிதி திரட்டுவது போன்ற கட்சிப் பணிகளை நண்பர்களுடன் சேர்ந்து ஆர்வமுடன் மேற்கொண்டார்.கலைத்துறையில் மிகுந்த நாட்டம் 1968ல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தை முன்னேடுத்தார் மு.க.ஸ்டாலின். அதன்பின்னர் வட்டப் பிரதிநிதியாகவும், 1973ல் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் தேர்வானார். தீவிர அரசியலில் இருந்தபோதும் கலைத்துறையில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். இவர் நடித்த முரசே முழங்கு நாடகத்தை எம்ஜிஆர், கலைஞர் ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். திராவிட இயக்கம் தொடர்பான நாடகங்களை தொடர்ந்து நடத்தி வந்தார். ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். குறிஞ்சி மலர் என்ற சீரியலிலும் அவர் நடித்துள்ளார்.அனைத்து தேர்தல்களிலும் வெற்றிஅவசர நிலை காலத்தில் மிசா சிறைக்கைதியாக அடைக்கப்பட்ட மு,க.ஸ்டாலின், அங்கே கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். ஓராண்டு சிறைத் தண்டனைக்குப் பிறகு, வெளியே வந்த அவர், தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டார். 1980ம் ஆண்டில் மதுரையில் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு, கட்சியை வலுப்படுத்த பாடுபட்டார். 1984ல் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், 1989ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். அதன் பிறகு அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.திமுக தலைவரானார் சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சிங்காரச் சென்னையாக மாற்றும் வகையில் நகரின் தூய்மைப் பணி, பாலம் கட்டுதல் போன்ற முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டார். உள்ளாட்சித்துறை, தொழில்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்த ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். சென்னை மெட்ரோ ரயில் வருவதற்கு முனைப்புடன் செயல்பட்டார். கட்சியில் துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் போன்ற பதவிகளை வகித்த மு.க.ஸ்டாலின் கலைஞர் காலமான பின் கட்சித் தலைவராக தேர்வானார்.திட்டங்கள், வரவேற்பு2021 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான ஸ்டாலின், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், அவர் நடைமுறைப்படுத்திய திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டம், முதல்வர் மருந்தகங்கள் போன்ற திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றன.தவிர்க்க முடியாத சக்திஅரசியல் தலைவராக மாற்றுக் கட்சியினர் உள்பட அனைவரோடும் நட்புப் பாராட்டுபவர் மு.க.ஸ்டாலின். பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி தேசியத் தலைவர்களோடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர். தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமின்றி அகில இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகிறார் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். Related Link நம் கால்கள் பாதை மாறக்கூடாது...