2024-25 நிதியாண்டில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 3 லட்சம் என்ற வருடாந்திர வாகன விற்பனையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான வாகனத் தயாரிப்பாளர்களின் விற்பனை குறைந்து வரும் நிலையில், டொயோட்டாவின் விற்பனை மாதந்தோறும் இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருவதாக அதன் இந்திய பிரிவு தலைவர் விக்ரம் குலாத்தி தெரிவித்துள்ளார். தாய் நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷனுக்கு சுஸுகி மோட்டார் நிறுவனத்துடன் உள்ள தொடர்பு, எஸ்யுவி மார்க்கெட்டில் இருக்கும் ஆதிக்கம் ஆகியவற்றால் டொயோட்டாவின் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.