உத்தரபிரதேசம் மாநிலம் பிரக்யராஜ்ஜில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஒவ்வொருவரையும் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், அருகில் இருந்த மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.