வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன். திடீரென சிறுவன் மாயமானதால் பெற்றோர் அதிர்ச்சி. பல இடங்களில் தேடியும் பலன் இல்லாததால் காவல் நிலையத்தில் புகார். சந்தேகப்பட்டு பக்கத்து வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள். கட்டிலுக்கு அடியில் இருந்த பெட்டியில் துணியோட துணியாக கிடந்த சிறுவன் சடலம். அப்பாவி சிறுவன் கொல்லப்பட்டது ஏன்? கொடூர கொலையின் பின்னணி என்ன? மகனை பல இடங்களில் தேடி அலைந்த தாய்மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். தந்தை வழக்கம்போல வேலைக்கு போயிருக்காரு. தாய், தன்னோட ரெண்டாவது மகள கவனிச்சிட்டு இருந்துருக்காங்க. 13 வயசு மகன் தெருவுல சைக்கிள் ஓட்டி விளையாடிட்டு இருந்துருக்கான். ரொம்ப நேரமா விளையாடிட்டு இருந்த பையன சாப்பிட கூப்டுருக்காங்க தாய். அப்போ மகன் கிட்ட இருந்து எந்த பதிலும் இல்ல. உடனே வாசல்ல போய் பாத்துருக்காங்க. அங்க மகன காணும். உடனே பதறிப் போனவங்க, தெரு முழுக்க தேடி அலஞ்சிருக்காங்க.ரேஹானிடம் சிறுவன் பேசிக் கொண்டிருந்ததாக கூறிய ஒருவர்எங்க தேடியும் கிடைக்காததால, கணவனுக்கு ஃபோன் பண்ணி விஷயத்த சொல்லிருக்காங்க. அடுத்த கொஞ்ச நேரத்துலேயே சிறுவனோட அப்பாவும், சொந்தக்காரங்களும் வீட்டுக்கு வந்திருக்காங்க. மூணு மணி நேரத்துக்கு மேலாகியும் சிறுவன் கிடைக்காததால, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க. உடனே சம்பவ இடத்துக்கு போன போலீஸ், அக்கம் பக்கத்துல உள்ளவங்க கிட்டலாம் விசாரிச்சிருக்காங்க. அப்போ, வீட்டுக்கு முன்னாடி சைக்கிள் ஓட்டிட்டு இருந்த சிறுவன் கிட்ட, பக்கத்து வீட்டுல இருந்த 21 வயசான ரேஹான் பேசிட்டு இருந்ததா, அந்த தெருவ சேர்ந்த ஒருத்தங்க போலீஸ்கிட்ட சொல்லிருக்காங்க.ரேஹானின் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர்உடனே போலீஸுக்கு அந்த ரேஹான் மேல டவுட் வந்திருக்கு. இந்த விஷயம் கேள்விப்பட்டதுல இருந்து, ஏற்கெனவே எங்களுக்கு அவன் மேல தான் சந்தேகமா இருக்கு, அவனோட நடவடிக்கைதான் எங்களுக்கு வித்தியாசமா தெரிஞ்சதுன்னு சிறுவனோட அம்மா அப்பாவும் போலீஸ்கிட்ட சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம், சிறுவனோட பக்கத்து வீடான, ரேஹான் வீட்டுக்கு போய் சோதனை பண்ணிருக்காங்க. அங்க எந்த தடயமும் சிக்கல. அடுத்து, ரேஹான ஸ்டேஷனுக்கு கூப்டு போய் விசாரிச்சிருக்காங்க. அப்போ, தனக்கு எதுவுமே தெரியாதுன்னு ரேஹான் அடிச்சு சொல்லிருக்கான். அந்த நேரத்துல, அவனோட கழுத்து பகுதிகள்ல நக கீறல்கள் இருந்தத கவனிச்ச போலீஸ்காரங்க அத பத்தி அவன்கிட்ட கேட்டுருக்காங்க. அதுக்கு, வேலை பாக்குற இடத்துல பொருட்கள ஏத்தி இறக்கும்போது காயம் ஏற்பட்டதா சொல்லிருக்கான் ரேஹான். ரேஹானின் கழுத்தில் இருந்த காயங்களை கவனித்த போலீசார்ஆனா, விசாரணையில, அவன் நாலஞ்சு மாசமா வேலைக்கு போகாம வீட்டுல இருந்தது தெரியவந்துச்சு. இதுக்கு இடையில, சிறுவனோட உறவினர்களும், தெரு மக்களும் ரேஹானோட வீட்டுக்குள்ள புகுந்துருக்காங்க. அப்போ, வீட்டு மொட்ட மாடியில ரத்தக்கறைகளும், சிறுவன் போட்டுருந்த சட்டையோட பிட் துணியும் இருந்தத பாத்த பெற்றோர் கதறி அழுதுருக்காங்க. அப்போ, ரேஹான் தான் மகன ஏதோ பண்ணிருக்கான்னு சொல்லி, போலீஸுக்கு தகவல் சொல்லிருக்காங்க. வசமா மாட்டிக்கிட்டோம், இனிமே தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்ட, ரேஹான் எல்லா உண்மையையும் போலீஸ்ட சொல்லிருக்கான். கட்டிலுக்கு அடியில் உள்ள பெட்டியில் சடலமாக கிடந்த சிறுவன்நான் தான் சிறுவன கொலை பண்ணி எங்க வீட்டுல மறைச்சி வச்சிருக்கேன்னு ரேஹான் சொன்னத கேட்டதும், ஷாக்கான போலீஸ் அவன உடனே ஸ்பாட்டுக்கு கூப்பிட்டுட்டு போய் சோதனை பண்ணிருக்காங்க. அப்போ, ரேஹானோட பாட்டி படுத்துட்டு இருந்த கட்டில் உள்ள பெட்டிக்குள்ள ஆடைகளுக்கு நடுவுல, 13 வயது சிறுவன், முகம் சிதைஞ்சு துணியால கட்டப்பட்டு சடலமா கிடந்தத பாத்து பெத்தவங்க துடிதுடிச்சு போயிட்டாங்க. வீட்டின் மாடியில் வைத்து சிறுவனை சித்ரவதை செய்த கொடூரன்சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்ச போலீஸ், எதுக்காக சிறுவன கொலை பண்ணன்னு விசாரிச்சாங்க. சம்பவத்தனைக்கு, 13 வயசு சிறுவன் மட்டும் வீட்டு வாசல்ல தனியா சைக்கிள் ஓட்டி விளையாடிட்டு இருந்துருக்கான். அப்போ, சிறுவன் தனியா இருக்குறத பாத்த ரேஹானுக்கு காமவெறி தலைக்கு ஏறியிருக்கு. அந்த நேரம் பாத்து அங்க ஆள்நாட்டமே இல்லாம இருந்துருக்குது. அப்போ, சிறுவனோட வாய பொத்தி தன்னோட வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கிட்டு போய் பாலியல் ரீதியா துன்புறுத்திருக்கான். Related Link இளம்பெண் மரணத்தில் TWIST வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்ட 13 வயது சிறுவன்சிறுவன் வலி தாங்க முடியாம கத்தி, கூச்சல் போட்டுருக்கான். இந்த சத்தம் கேட்டு யாராவது வந்துட்டா, நம்மள காட்டி கொடுத்திடுவான்னு பயந்த ரேஹான், இச்சை தீர்ந்ததும் கல்லால சிறுவனோட முகத்த சிதைச்சும், ஏழு, எட்டு முறை கயிறால கழுத்தை இறுக்கியும் கொடூரமா கொன்னுருக்கான். ரேஹானை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணைஅதுக்குப்பிறகு, சடலத்த எங்கையாவது தூரமா கொண்டு போய் போட்ரனும்னு நினச்சிருக்கான் ரேஹான். ஆனா அதுக்குள்ள சிறுவனோட சொந்தக்காரங்களாம் தெரு முழுக்க தேடி அலஞ்சதால சடலத்த வெளில கொண்டு போக முடியாம போய்ருக்கு. அதனால, சிறுவனோட சடலத்த துணியால சுத்தி, வீட்டுல உள்ள இரும்பு கட்டிலுக்கு அடியில உள்ள பெட்டியில துணியோட துணியா திணிச்சு வச்சிருக்கான். அதுக்கப்புறம், அந்த கட்டில் மேல தன்னோட வயதான பாட்டிய படுக்க வச்சிட்டு கமுக்கமா இருந்துருக்கான். விசாரணையில் மொத்த உண்மையும் தெரியவரவே, ரேஹான் மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ் அவன அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரிச்சிட்டு இருக்காங்க. Related Link மனைவியுடன் இணைந்து சம்பவம் செய்த கணவன்