கால்வாயில் முகம் சிதைந்த நிலையில், சடலமாக கிடந்த காதலி. கிராமத்தில் உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து விசாரித்த போலீஸ். சிசிடிவி காட்சியில பதிவான கொலையாளிகளின் முகம். மூன்று பேரை கஸ்டடியில் எடுத்து கிடுக்குப்பிடி விசாரணையில் இறங்கிய போலீஸ். இறுதியில் காத்திருந்த பகீர் ட்விஸ்ட். காதலி கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? கொலை செய்த மூன்று நபர்கள் யார்? சிசிடிவி காட்சியில் பதிவான முகம்கோரக்பூரின் பிப்பிகஞ்ச் பகுதி வழியா பொதுமக்கள் நடந்து போய்ட்டு இருந்தாங்க. அப்ப அங்குள்ள ஒரு கால்வாய்ல முகம் சிதைஞ்ச நிலையில பிரியாங்குற பெண் உயிரிழந்து கிடந்துருக்காங்க. இத பாத்து அதிர்ச்சியடைஞ்ச பொதுமக்கள் போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொன்னாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சடலத்த மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து பிரியாவ யாரு கொலை பண்ணது? எதற்காக இந்த கொலை நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க விசாரணையில இறங்குனாங்க. முதல்ல கொலையாளிகள் யாருன்னு கண்டுபிடிக்க அந்த ஏரியாவுல உள்ள மொத்த சிசிடிவி காட்சிகளையும் எடுத்து பாத்துருக்காங்க போலீஸ். அப்ப அந்த வழியா, 2 நபர்களோட பிரியா பைக்ல போன காட்சி பதிவாகியிருந்துருக்கு. ஆனா அவங்க திரும்பி வரும்போது பிரியா அந்த பைக்ல இல்லை. இதனால சந்தேகமடைந்த போலீஸ் அந்த பைக் நம்பர வச்சு, நேரா விஜய்-ங்குற நபரோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப போலீச பாத்ததும் விஜயும் அவரோட மனைவியும் தப்பிச்சு ஓட பாத்துருக்காங்க. ஆனா போலீசார் அவங்க ரெண்டு பேரையும் பிடிச்சு கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. அதுல தான் பல உண்மைகள் வெளிய வந்துருக்கு.பிரியா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்த விஜய்உத்தரப் பிரதேசத்துல உள்ள பிப்பிகஞ்ச் பகுதிய சேந்தவரு விஜய். இவருக்கு கல்யாணமாகி சந்தியா-ங்குற மனைவியும், ரெண்டு பசங்களும் இருக்காங்க. விஜய் மும்பையில் உள்ள ஒரு ப்ரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்தாரு. அப்ப விஜய்க்கும் அதே கம்பெனியில வேலை பார்த்துட்டு இருந்த பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கு. முதல்ல நார்மலா பேச ஆரம்பிச்ச ரெண்டு பேரும் நாள் போக போக எல்லை மீறி பழகிருக்காங்க. இந்த பழக்கமே அவங்களுக்குள்ள தகாத உறவா மாறிருக்கு. அதுக்கடுத்து ரெண்டு பேரும் பீச், பார்க், ஓட்டல்ன்னு ஜாலியா ஊர் சுத்திட்டு இருந்துருக்காங்க. அடுத்து ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்காம மும்பையிலையே ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து ஒன்னா வாழ ஆரம்பிச்சுருக்காங்க.விஜயை தேடி அவரது ஊருக்கு சென்ற காதலிவிஜய் மேல ரொம்ப பாசமா இருந்த பிரியா ஒரு கட்டத்துல தன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணிருக்காங்க. அதுக்கு விஜய், ஏதேதோ சொல்லி மழுப்ப பாத்துருக்காரு. அப்ப பிரியா அதெல்லாம் எனக்கு தெரியாது, என்னால உன்ன பிரிஞ்சு இருக்க முடியாது, நீ இல்லன்னா நான் செத்துருவேன் தயவு செஞ்சு என்ன கல்யாணம் பண்ணிக்கோன்னு விஜய்கிட்ட கெஞ்சுருக்காங்க. இதனால பயந்து போன விஜய், வேலையையே உதறி தள்ளிட்டு சொந்த ஊருக்கே திரும்பிட்டாரு. பிரியா கிட்ட பேசுறதையும் கொஞ்சம் கொஞ்சமா கொறச்சுட்டாரு. ஆனா, விஜய மறக்க முடியாத பிரியா, அவர தேடி கோராக்பூருக்கு வந்துருக்காங்க. இத தெரிஞ்சு பதறிப்போன காதலன், நீ எதுக்கு இங்க வந்தன்னு பிரியா கிட்ட கேட்ருக்காரு. அதுக்கு பிரியா நீ எதுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க பயப்புடுற நீ ஏதோ ஒரு விஷயத்த என்கிட்ட இருந்து மறைக்கிறன்னு சொல்லிருக்காங்க. அப்ப விஜய் எனக்கு கல்யாணமாகி ரெண்டு பசங்க இருக்காங்க, இந்த விஷயம் மட்டும் என் மனைவிக்கு தெரிஞ்சா அவ என்ன உயிரோடையே விடமாட்டா? தயவு செஞ்சு இங்கருந்து போய்ருன்னு கெஞ்சுருக்காரு?ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்ற விஜய்இத தெரிஞ்சு கடும் கோபமான பிரியா, நீ என்னைய ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கோன்னு மிரட்டி கோரக்பூர விட்டு கிளம்ப மறுப்பு தெரிவிச்சதா கூறப்படுது. இதனால என்ன செய்றதுன்னு தெரியாம விழிபிதுங்கி நின்ன விஜய், பிரியாவ ஒரு தனியார் விடுதில தங்க வச்சுட்டு, நடந்த எல்லாத்தையும் தன்னோட மனைவி சந்தியா கிட்ட சொல்லிட்டாரு. இதனால கடும் கோபமான சந்தியா, கணவன தகாத வார்த்தையால திட்டிருக்காங்க. அப்ப, பிரியா உயிரோட இருக்க வர்ற, என்ன டார்ச்சர் பண்ணிட்டு தான் இருப்பா, அவளக் கொலை பண்ணா தான் நம்ம நிம்மதியா வாழ முடியும்ன்னு சொல்லிருக்காரு. அதுக்கு மனைவி சந்தியாவும் ஓகே சொல்ல, கொலை திட்டத்துல தன்னோட மைத்துனரையும் கூட சேத்துக்கிட்டாரு விஜய். சம்பவத்தன்னைக்கு பிரியாவுக்கு ஃபோன் பண்ண விஜய், உன்கூட கொஞ்சம் தனியா பேசனும்னு சொல்லிருக்காரு. அதுபடி விஜய், பிரியா, அவரோட மைத்துனர் ஆகிய மூணு பேரும் பைக்ல ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு போய்ருக்காங்க. அப்ப பிரியாவுக்கு ரெண்டு பேரும் சேந்து மது ஊத்தி கொடுத்துருக்காங்க.விஜய், சந்தியா உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீஸ்பிரியா ஃபுல் போதை ஆனத தெரிஞ்சுகிட்ட ரெண்டு பேரும் அவங்கள சரமாரியா தாக்கி கழுத்த நெரிச்சு கொன்னுருக்காங்க. அடுத்து கீழ கிடந்த செங்கல எடுத்து முகத்துலையே பலமுறை ஓங்கி அடிச்சு முகத்த சிதைச்சுட்டு அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா சிசிடிவி காட்சி மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் விஜய், சந்தியா உள்ளிட்ட 3 பேரை அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link மக்கள் பிரதிநிதியா? ரவுடிகள் பிரதிநிதியா?