மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்துவிட்டதாக கூறிய பெற்றோர். காதலியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸ் ஸ்டேஷன் வாசலேறிய காதலன். சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பிய போலீஸ். மின்சாரம் பாய்ந்தவுடம் இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதது ஏன்? வேறு சாதி இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலையா? நடந்தது என்ன?"என் காதலி மரணத்தில் சந்தேகம் உள்ளது"உத்தரபிரதேச மாநிலம், கோண்டா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த இளைஞர் ஒருத்தரு, தன்னோட காதலி உயிரிழந்துட்டதாவும், அவங்க வீட்டுல உள்ளவங்க சேந்து அடிச்சு கொன்னுட்டு நாடகமாடுறதா சந்தேகம் இருக்குறதாவும் கைப்பட எழுதி கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரு. பையன் சொல்றத வச்சு பாத்தா, ஒருவேளை ஆணவக்கொலையா இருக்குமோங்குற சந்தேகத்துலேயே, இளைஞர் கையில இருந்த கம்ப்ளைண்ட் லெட்டர வாங்கி படிச்சாங்க, ஸ்டேஷன்ல இருந்த காவலர்கள்.மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்லக்னோவுல உள்ள தோர்ஹான்ஸ் கிராமத்த சேர்ந்த 21 வயசான ரோஷ்னியும், அதே கிராமத்த சேர்ந்த பரமேஷ்வர்ங்குற இளைஞரும் ஒரே காலேஜ்ல படிச்சிருக்காங்க. அப்ப ரெண்டு பேருக்கும் பழக்கமாகி, அது காதலாகி, கடந்த 2 ஆண்டுகளாவே ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு இருந்துருக்காங்க. இந்த நிலையில, இவங்களோட காதல் விஷயம், ரோஷ்னியோட பெற்றோருக்கு தெரியவந்து, பிரச்சினை வந்திருக்கு. ரோஷ்னியும், பரமேஷ்வரும் வெவ்வேறு சாதிய சேர்ந்தவங்க. அத காரணம்காட்டி, ரோஷ்னியோட பெற்றோர், இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சதா சொல்லப்படுது. காதலையும், காதலனையும் மறந்துட்டு நாங்க கைகாட்டுற மாப்பிள்ளைய தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லி ரோஷ்னிய கண்டிச்சிருக்காங்க. ஆனா, ரோஷ்னி தன்னோட காதல்ல உறுதியா இருந்துருக்காங்க.வீடு தேடிச் சென்று ரோஷ்னியை பெண் கேட்ட பரமேஷ்வர்பரமேஷ்வர், தன்னோட பெற்றோர், சொந்தக்காரங்க, பிரண்ட்ஸ்னு எல்லாரையும் ரோஷ்னியோட வீட்டுக்கு கூப்டிட்டு போய் பெண் கேட்டதாவும், ஆனா, பெண் தரமாட்டோம்னு சொன்னது மட்டுமில்ல, அவங்கள ரோஷ்னியோட பெற்றோர் அவமானப்படுத்தி அனுப்புனதாவும் சொல்லப்படுது. காதல் விஷயம் தெரிஞ்சதுல இருந்தே, ரோஷ்னியோட வீட்டுல ஒரே பிரச்சினையா தான் இருந்துருக்கு."மின்சாரம் பாய்ந்து மகள் ரோஷ்னி உயிரிழந்துவிட்டார்"இப்படிப்பட்ட நிலையில, ஜனவரி 31ந் தேதி அன்னைக்கு, கரண்ட் ஷாக்கடிச்சு ரோஷினி உயிரிழந்துட்டதா அவங்களோட பெற்றோர் சொந்தக்காரங்க கிட்ட சொல்லியிருக்காங்க. உடனே நெருங்குன சொந்தக்காரங்கள மட்டும் வச்சு, ரோஷினிக்கு இறுதி சடங்கு ஏற்பாடுகளும் அவசர அவசரமா பண்ணிருக்காங்க. காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த பரமேஷ்வர்இந்த விஷயம் காதலன் பரமேஷ்வருக்கு தெரிஞ்சு, கதறி அழதுருக்காரு. அதுக்கப்புறம், நேரா போலீஸ் ஸ்டேஷனுக்கு போனவரு, வேற சாதிய சேர்ந்த என்னைய லவ் பண்ணதால தான், ரோஷினியோட அப்பாவும் அண்ணனும் அடிச்சு கொன்னுட்டாங்களோன்னு சந்தேகமா இருக்குன்னு சொல்லி கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காரு. அந்த கம்ப்ளைண்ட்ல, கரண்ட் ஷாக்கடிச்ச உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூப்டு போகாம, யாருக்கும் சொல்லாம, ஏன் அவசர அவசரமா இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் பண்ணாங்கன்னும் கேள்வி எழுந்துருந்துச்சு. காதலன் பரமேஷ்வர் கொடுத்த புகார் அடிப்படையில, வழக்குப்பதிவு பண்ண போலீஸ், நேரா ரோஷினியோட வீட்டுக்கு போய், சடலத்த மீட்டு பிரிசோதனைக்கு அனுப்பி வச்சாங்க.போலீசார் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்அடுத்து, ரோஷினியோட அப்பா பிரகாஷ் பாண்டேவையும், அண்ணன் ராகுல் பாண்டேவையும் விசாரணைக்காக காவலர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழச்சிட்டு போய்ருக்காங்க. வேற சாதி பையன லவ் பண்ண கோவத்துல ரோஷ்னி ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்காங்களாங்குற கோணத்துல, அவங்க ரெண்டு பேர் கிட்டயும் போலீஸ் தீவிர விசாரணை நடத்துனாங்க. அதுலதான், ரோஷ்னிக்கு நடந்த கொடூரம் என்னங்குறது வெளிச்சத்துக்கு வந்திருக்கு.காதலனுடன் ஃபோன் பேசிக்கொண்டிருந்த ரோஷ்னிசம்பவத்தனைக்கு காலையில ரோஷினியோட அம்மா சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிருந்துருக்காங்க. வீட்டுல அவங்களோட அண்ணனும், அப்பாவும் மட்டும்தான் இருந்தாங்க. அப்ப, ரோஷினி காதலன் பரமேஷ்வர் கிட்ட ஃபோன்ல பேசிட்டு இருந்ததா சொல்லப்படுது. இத பாத்து ஆத்திரமடைஞ்ச அண்ணன் ராகுல், பரமேஷ்வர்கூட பேசுறத நிறுத்து, பழகுறத நிறுத்துன்னு பலமுறை சொல்லியும் கேட்காத தங்கச்சி மேல உச்சக்கட்ட கோவத்துல இருந்துருக்கான்.மின்சாரம் பாய்ந்து மகள் உயிரிழந்துவிட்டதாக நம்பிய தாய்அந்த ஆத்திரத்துல, வீட்டுல இருந்த இரும்பு கம்பியால ரோஷினிய ஓங்கி அடிச்சிருக்கான் ராகுல். அதோட, பெத்த மகள்னு கூட பாக்காம தந்தை பிரகாஷ், ரோஷினிய தனி அறைக்கு இழுத்துட்டு போய் அவங்க உடம்புல மின்சாரத்த பாய்ச்சு சித்ரவதை பண்ணிருக்காங்க. இதுல ரோஷினி சம்பவ இடத்திலேயே துடிதுடிச்சு இறந்துட்டாங்க. அதுக்கப்புறம், ரூம்ல இருந்த ரோஷினி கரண்ட் ஷாக்கடிச்சு உயிரிழந்த மாதிரி செட்டப் பண்ணிருக்காங்க. இதுக்கு நடுவுல வெளிய போன தாய், வீட்டுக்கு வந்து பாத்தப்ப, கணவனும், மகனும் அழுதுட்டே சொன்ன விஷயத்த நம்புனவங்க, உண்மையிலேயே கரண்ட் ஷாக்கடிச்சுதான் மகள் இறந்துட்டான்னு நினச்சு, உடல அடக்கம் பண்ண ஏற்பாடுகளையும் சீக்கிரமா பண்ணிருக்காங்க.தந்தையையும், மகனையும் கைது செய்த போலீசார்விசாரணையில எல்லா உண்மையும் தெரிஞ்சதுக்கு அப்புறம், வேற சாதி பையன காதலிச்சதுக்காக, பெத்த மகளோட உடம்புல மின்சாரத்த பாய்ச்சு துடிக்க துடிக்க கொன்னுட்டு நாடகமாடுன தந்தை பிரகாஷையும், அண்ணன் ராகுலையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடச்சிட்டாங்க. Related Link மனைவியுடன் இணைந்து சம்பவம் செய்த கணவன்