வேலையில் இருந்து பாதியில் வீடு திரும்பிய கணவன். வீட்டின் கதவை திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி. தனது அக்கா மகனுடன் மனைவி தனிமையில் இருந்ததை கண்டு கொந்தளித்த கணவன். காலில் விழுந்து கதறி அழுது கொண்டே காலை வாரிய கொடூர மனைவி. துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கபட நாடகம். யாருக்கும் சந்தேகம் வராதபடி அழுது புரண்டு நாடகமாடியும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? கணவரை யாரோ அடித்து கொன்று விட்டதாக புகார்காவல் அவசர உதவி எண்100க்கு, ஃபோன் பண்ண பெண், நேத்து நைட்டு என் கணவர யாரோ அடிச்சு போட்டுட்டாங்க, வீட்டுக்கு வந்து படுத்தவரு காலையில இறந்து போய்ட்டாருன்னு சொல்லிருக்காங்க. உடனே போலீஸ்காரங்களும் சம்பவ இடத்துக்கு போய், இறந்து கிடந்த ரவியோட சடலத்த கைப்பற்றி, போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம், அவரோட மனைவி லட்சுமிகிட்ட, உங்க கணவருக்கு என்னாச்சுன்னு விசாரிச்சிருக்காங்க. அப்போ, நேத்து நைட் என் கணவர் யார்கூடயோ சண்ட போட்டு ரத்தக்கறையோட வீட்டுக்கு வந்தாரு, என்னாச்சுன்னு கேட்டதுக்கு, என்ன சத்தம் போட்டுட்டு தூங்க போய்ட்டாரு, காலையில பாத்தா சடலமா கிடந்தாருன்னு சொல்லிருக்காங்க. Related Link அய்யோ, 25 சவரன் நகை போச்சே ரவியின் மனைவி மீது போலீஸுக்கு எழுந்த சந்தேகம்அதுக்கப்புறம், ரவிய யாராச்சு அடிச்சாங்களா, அந்த ஏரியாவுல, முந்துன நாள் நைட்டு ஏதாவது தகராறு நடந்துச்சான்னு ஏரியா மக்கள் கிட்ட விசாரிச்சிருக்காங்க. ஆனா, ஊருக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லன்னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க சொல்லிருக்காங்க. இது, போலீஸுக்கு, ரவியோட மனைவி மீது சந்தேகத்த ஏற்படுத்திருக்கு. அதுக்கப்புறம், திரும்பவும் லட்சுமிகிட்ட விசாரிச்சிருக்காங்க. ஊருக்குள்ள எந்த பிரச்சினையுமே நடக்கலையே, பின்ன யாரு உன் கணவர அடிச்சிருப்பா, எங்க வச்சு பிரச்சினை நடந்திருக்கும்னு போலீஸ் கேட்டதுக்கு, அவர் வெளியூர் போய்ருந்ததா சொன்னாரு, ஒரு வேள அங்க வச்சு பிரச்சினை நடந்திருக்கும்னு நினைக்கிறேன் சார், ஆனா அவரு எந்த ஊருக்கு போனாருன்னு எனக்கு தெரியாதுன்னு சொல்லிருக்காங்க.ரவியின் மனைவியிடம் கிடுக்குப்பிடி விசாரணைரவியோட மனைவி லட்சுமி, சுத்தல்ல விடப்பாக்குறாங்கன்னு புரிஞ்சிகிட்ட போலீஸ், அதுக்கப்புறம் அவங்கள ஸ்டேஷனுக்கு கூப்டு போய் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திருக்காங்க. ஒரு கட்டத்துல, போலீஸோட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, லட்சுமி நடந்த எல்லா உண்மையையும் ஒன்னு விடாம சொல்லிட்டாங்க. மனைவியின் தகாத உறவை நேரில் பார்த்த கணவர்தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவ சேர்ந்த 34 வயதான ரவிக்கும், ரங்காரெட்டிக்கு பக்கத்துல உள்ள குப்பகுண்ட்லா பகுதிய சேந்த லட்சுமிக்கும் கடந்த 14 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. இவங்களுக்கு ரெண்டு மகன்கள். இளைய மகன் மாற்றுத் திறனாளி. மூத்த மகன் அரசு பள்ளில ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருக்கான். இதுக்கு நடுவுல, ரவியோட அக்கா மகன் அடிக்கடி அவரோட வீட்டுக்கு வந்துட்டு போறதுமா இருந்துருக்கான். அப்போ, லட்சுமிக்கும், கணேஷுக்கும் இடையில நெருக்கம் ஏற்பட்டுருக்குது. ரவி வீட்டுல இல்லாதப்ப ரெண்டு பேரும் அடிக்கடி வீட்டுல தனிமையில சந்திச்சிருந்துருக்காங்க. அப்படி ஒருநாள் கணேஷ் கூட வீட்டுல தனிமையில இருந்தப்ப, திடீர்னு ரவி வந்திருக்காரு. வீட்டுக்குள்ள அரைகுறை ஆடையோட ரெண்டு பேரும் தனியா இருந்தத பாத்து டென்ஷன் ஆன ரவி, கத்தி சண்ட போட்டு மனைவிய அடிச்சிருக்காரு.கணவரைக் கொன்ற மனைவி லட்சுமி கைதுகணவருக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு, இனிமே நம்ம இஷ்டத்துக்கு இருக்க முடியாதுன்னு நினச்ச லட்சுமி, கணவர கொல்றதுக்கு முடிவு பண்ணிருக்காங்க. சம்பவத்தனைக்கு நைட்டு கணேஷுக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வரச் சொல்லிருக்காங்க. நைட் 12 மணிக்கு மேல, ரவி ஆழ்ந்து தூங்கிட்டு இருந்தப்போ, லட்சுமியும், கணேஷும் சேந்து, ரவியோட கழுத்த நெரிச்சுருக்காங்க. ஆனா, ரவி உயிரிழந்துட்டாரா இல்லையான்னு அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கு. உடனே, வீட்டுல இருந்த இரும்பு கம்பிய எடுத்து, ரவியோட தலையிலேயே ஓங்கி அடிச்சிருக்காங்க. அதுல ரவி உயிர் போய்ருச்சுங்குறத உறுதிப்படுத்திட்டு, போலீஸுக்கு போன் பண்ண லட்சுமி, கணவர யாரோ அடிச்சு கொன்னுட்டாங்கன்னு சொல்லி நாடகமாடிருக்காங்க.விசாரணையில, எல்லா உண்மையையும் தெரிஞ்சிக்கிட்ட போலீஸ், கணவனை கொன்ன மனைவி லட்சுமிய அரெஸ்ட் பண்ணிட்டாங்க. Related Link முந்திரி விவசாயிக்கு தீவைப்பு