மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 50% ஆக உயர்த்தப்பட வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்திய திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது என்றும் தாமதமின்றி உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.