Also Watch
Read this
By: Web Team

ஒரு அரசியல் தலைவரை, கட்சியின் மாநில தலைவரை அநாகரிகமாக விமர்சிப்பது, எடப்பாடி பழனிசாமியின் தரத்தை காட்டுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்ததாக தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டதாகவும், வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்றும் கூறினார்.