ராமேஸ்வரத்தில், காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார். பெண்ணியம் போற்றும் தமிழகத்தை பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றி விட்டதாக, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த இபிஎஸ், அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்ற அச்சத்துடன் ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடப்பதாக, காட்டமாக சாடினார்.இதையும் பாருங்கள் - பள்ளி மாணவி கொ*ல, ரத்தம் கொதிக்க கொந்தளித்த EPS | Rameshwaram News | LoveIssue