தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, சுழற் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை, கேப்டன் ரிஷப் பந்த் திட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் வீச 60 வினாடிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விதி இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே இரண்டு முறை 60 விநாடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொண்டதால் பெனால்டி விதிக்க வாய்ப்பிருந்த நிலையில் குல்தீப் பந்து வீச தாமதப்படுத்தியதால் கோபமடைந்த ரிஷப் பந்த், “நீங்க என்ன வீட்ல விளையாடுறீங்களா? சீக்கிரமா பந்தை வீசுங்க என கடிந்து கொண்டார்.