இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிபெற்று தொடரை 2-க்கு 1 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்செல், பிலிப்ஸ் ஆகியோர் சதம் அடித்தனர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிபட்சமாக விராட் கோலி 124 ரன்கள் அடித்தார். நிதிஷ் ரெட்டி, ஹர்ஷித் ரானா ஆகியோர் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.இதையும் படியுங்கள் : விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர்