டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை எடுத்தும், 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய 4-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜடேஜா 27 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதில் 9 ரன்கள் அடித்திருந்தபோது ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். முன்னதாக இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்த சாதனைப் பட்டியலில் இயன் போத்தம் முதலிடத்திலும், கபில் தேவ் 2ம் இடத்திலும் டேனியல் வெட்டோரி 3ம் இடத்திலும் உள்ளனர்.