19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஆட்டத்தில், அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இரட்டை சதத்தை தவறவிட்டார். 95 பந்துகளில் 14 சிக்சர்கள் உட்பட 171 ரன்களை குவித்த சூர்யவன்ஷி, இரட்டை சதம் விளாசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.