ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் பாபர் அசாம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தவும், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.