2026 டி-20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வங்கதேச அணி வெளியேற்றப்பட்டதன் மூலம், அந்த அணிக்கு சுமார் 360 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் ஆட மறுத்த வங்கதேச அணி, உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது. பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவில் ஆட வைக்க ஐசிசி முயற்சித்தும் வங்கதேசம் ஒத்துவராததால், ஐசிசி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஆண்டு வருவாயில் 60 சதவிகிதம் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரிகிறது. Related Link U-19 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி