பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஜூன் 4ஆம் தேதி ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி அணிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது.