பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட சர்ச்சையால் பதக்கம் பறிபோன விரக்தியில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்றுள்ளார். தாம் என்ன தான் விலகிச் சென்றாலும் தனது மனதில் விளையாட்டுத் தீ அணைய வில்லை என்று கூறி மீண்டும் விளையாட போவதாக அறிவித்துள்ள அவர், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.