சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான்-இந்தியா மோதும் போட்டி ஒருதலை பட்சமாக செல்லும் என ஹர்பஜன்சிங் கணித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எடுத்துக் கொண்டால் இந்திய அணி மிகவும் பலமான அணியாக இருக்கிறது என்றும், பாகிஸ்தானை பொறுத்த வரை பாபர் மற்றும் ரிஸ்வான் தவிர வேறு யாரும் இல்லை எனவும் கூறியுள்ளார்.