2026 ஐபிஎல் தொடருக்காக அடுத்த மாதம் அபுதாபியில் நடைபெறும் மினி ஏலத்தில் சிறந்த வீர்ரகளை அதிகப்பட்ச தொகைக்கு வாங்க சிஎஸ்கே, கொல்கத்தா அணிகள் மலுக்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே அணி 11 வீரர்களை விடுவித்ததன் மூலம் தன் கைவசம் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் வைத்துள்ளது. இதனால் மினி ஏலத்தில் முக்கிய வீரர்களுக்காக பெரிய தொகை வரும் சென்னை அணி செல்லும் என தெரிகிறது. அதேவேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் கைவசம் 63 கோடியே 40 லட்சம் ரூபாய் உள்ளதால் மினி ஏலத்தில் கொல்கத்தா அணியும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.