25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நிச்சயம் வெல்வேன் என செர்பிய வீரர் ஜோகோவிச் உறுதி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் நோவல் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். தோல்விக்கு பிறகு பேசிய ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல முடியும் என நம்புவதாகவும், நம்பிக்கை இல்லாவிட்டால் போட்டிகளிலேயே பங்கேற்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். அரையிறுதியில் ஜானிக் சின்னரை 5 செட்டுகளில் தோற்கடித்ததும், இறுதிச்சுற்றில் கார்லசுடன் 4 செட் வரை நெருக்கமாக வந்ததும் சிறப்பானது எனக் கூறிய ஜோகோவிச் 2வது மற்றும் 3வது செட்டில் விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்ததாக தெரிவித்தார். Related Link தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கடும் மூடுபனி