இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை சேர்த்தது. குசால் மெண்டிஸ் 93 ரன்களும், ஜனித் லியாங்கே 46 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 49.2 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் டக்கெட் 62 ரன்களும், ஜோ ரூட் 61 ரன்களும் எடுத்தனர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. Related Link இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர்