தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலியின் 135 ரன்கள் மற்றும் குல்தீப் யாதவின் 4 விக்கெட்டுகள் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டன. இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் என்ற பிரமாண்ட ஸ்கோர் எடுத்தது. அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா, 49 புள்ளி 2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 332 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.