2011 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் மனம் திறந்து பேசியுள்ளார். புற்றுநோய் காரணமாக 6 மாதம் வரை மட்டுமே வாழ முடியும் என மருத்துவர்கள் கூறியபோது மனமுடைந்து போனதாகவும், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெறுவதை தவிர வேறு வழி எதுவும் தோன்றவில்லை எனவும் அவர் கூறினார்.