ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் அடித்ததன் மூலம், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடனின் மானத்தை காப்பாற்றியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஜோ ரூட் 100 ரன்கள் அடிக்கவில்லை என்றால் மைதானத்தை சுற்றி நிர்வாணமாக ஓடுவேன் என மேத்யூ ஹைடன் சவால் விட்டிருந்த நிலையில், இந்த போட்டியில் சதமடித்து ஹைடனின் மானத்தை ஜோ ரூட் காப்பாற்றி உள்ளார். இதனிடையே எங்கள் கண்களை காப்பாற்றியதற்கு நன்றி ரூட் என ஹைடனின் மகள் நகைச்சுவையாக கிரேஸ் ஹைடன் பதிவிட்டுள்ளார்.